சைட் பை சைட் குளிர்பதனப் பெட்டிகள்

3 years ago 845

வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு பதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பன்னாட்டு நிறுவனம் மற்றும் தொடர்ந்து 12 ஆண்டுகள் உலகின் நெ.1 பிராண்டாக விளங்கும் ஹையர் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ மற்றும் ‘இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்டது’ என்னும் பெருமையைப் பதிவு செய்யும் முதல் நிறுவனமாகும்.

இந்தியாவிலுள்ள பெரும்பான்மை வீடுகள் சைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பதால், சைட் பை சைட் குளிர்பதனப் பெட்டியிலுள்ள பெரிய ப்ரீசர் இடத்தைப் பொதுவாக அதிகம் பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாகப் பெரிய குளிர்பதனப் பிரிவின் தேவையும் அரிதாகிவிடுகிறது. எனவே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், ஹையர் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ மற்றும் ‘இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்டது’ ஆகிய இரு ஐகானிக் சைட் பை சைட் குளிர்பதனப் பெட்டிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. 2&3 டோர் கன்வெர்டிபிள் எஸ்பிஎஸ் (சைட் பை சைட்) 682 மற்றும் 683 வரிசை குளிர்பதனப் பெட்டிகளின் தொடக்க விலை முறையே ரூ 1,27,000/- மற்றும் ரூ 1,40,000/- ஆகும்.

ஹையர் 683 வரிசை 3 டோர் கன்வெர்டிபிள் சைட் பை சைட் குளிர்பதனப் பெட்டியின் மேற்புற இடது பக்கமுள்ள 21 சதவிகித கன்வெர்டிபிள் பிரிவு காரணமாகப் பயனீட்டாளர்கள் 62 சதவிகிதம் தொடங்கி 83 சதவிகிதம் வரை குளிர்பதன இடத்தை அதிகரித்துக் கொள்ளலாம். ப்ரீசருக்காகக் கீழ்ப்புற இடது பக்கம் ஒதுக்கப்பட்டுள்ள 17 சதவிகிதம் இடத்தை தேவைக்கேற்பச் சமகால இந்திய இல்லங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயனீட்டாளருக்கு அதிக ப்ரீசர் இடம் தேவைப்பட்டால், கன்வெடிபிள் பிரிவு மூலம் 38 சதவிகிதம் அதிகரிக்கும் நெகிழ்வுத் தன்மையும் உண்டு. 682 வரிசை சைட் பை சைட் குளிர்பதனப் பெட்டியின் 100 சதவிகிதம் குளிர்பதன அலகாக இயங்கும் திறன் கொண்ட இந்தியாவின் முதல் 2 டோர் 100 சதவிகிதம் கன்வெர்டிபிள் எஸ்பிஎஸ் ஆகும். மேம்பட்ட 66:34 குளிர்பதன விகிதம் காரணமாகப் பயனீட்டாளர்கள் 34 சதவிகிதம் ப்ரீசர் இடத்தை தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்தலாம்.

ஹையர் அப்ளையன்சஸ் இந்தியாவின் தலைவர் எரிக் பிரகான்ஸா கூறுகையில் ‘‘இந்தியாவில் தயாரி’ என்னும் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து வலுப்படுத்துவதுடன், ஈர்க்கப்பட்ட வாழ்க்கை என்னும் எங்கள் முக்கியத் தத்துவத்தின் அடிப்படையில் எங்கள் வாடிக்கையாளர்களின் வளரும் தேவைகளைக் கவனத்தில் கொண்டு புதுமையான பொருள்களைக் கண்டுபிடிக்கிறோம்’ என்றார்.

Read Entire Article