தமிழ் கற்கும் ராஷி கண்ணா
13 அக், 2021 - 16:59 IST
இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் படங்களுக்கு பிறகு அரண்மணை 3ம் பாகத்தில் நடித்துள்ளார் ராசி கண்ணா. சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரி என வேறு ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் இவர் தான் மெயின் ஹீரோயின். ஆர்யா ஜோடியாக நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த சுந்தர் சி ,குஷ்பூ ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர்யா கடின உழைப்பாளி. அரண்மனை 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சார்பாட்டா பரம்பரை படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார். நான் இதுவரை நடித்த படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமானது. கடுமையாக உழைத்தும் இருக்கிறேன். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை 15 நாள் படமாக்கினார்கள். அப்போது என்னை ரோப் கட்டி தூக்கி பறக்கவெல்லாம் விட்டார்கள்.
தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இதற்காக தமிழ் மொழியை தீவிரமாக கற்று வருகிறேன். அரண்மணை படப்பிடிப்பு தொடங்கும்போது ஓரளவுக்கு தமிழ் பேசினேன். முடியும்போது தெளிவாக பேச ஆரம்பித்து விட்டேன். இன்னும் முழுமையாக கற்று நான் நடிக்கும் படத்தில் நானே டப்பிங் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். என்றார்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா