”திருடன் இல்லாத சாதி இருக்கா? எல்லா சாதியிலும் இருக்காங்க”: ‘ஜெய் பீம்’ டீசர் வெளியீடு

3 years ago 708

Puthiyathalaimurai-logo

சினிமா

15,Oct 2021 02:17 PM

actor-suriya-jai-bhim-movie-teaser-released

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ‘கூட்டத்தின் ஒருத்தன்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடிக்கிறார் சூர்யா. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் நடிக்கிறார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கினையே ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகிறது. இந்த நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. டீசரில் ’பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’, ‘இந்த சாதில இருக்கவங்க திருட்டு கேஸில் கன்வெர்ட் ஆகுறது ரொம்ப சகஜம் சார்’... ‘திருடன் இல்லாத சாதி இருக்கா நட்ராஜ்’.. உங்க சாதி என் சாதின்னு எல்லா சாதிலும் பெரிய பெரிய திருடன் இருக்காங்க’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. மேலும், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக கம்னியூஸ்டுகள் போராடுவதும் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article