தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் மோகன் பாபு வன்முறை: பிரகாஷ்ராஜ் பகிரங்க குற்றச்சாட்டு
15 அக், 2021 - 14:00 IST
சமீபத்தில் நடந்து முடிந்த தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் மோகன்பாபு மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர்களை நடிகர் மோகன்பாபு அடித்து, மிரட்டி தன் மகனுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்தார் என்று பிரகாஷ்ராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட கிருஷ்ண மோகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் முடிந்த நடிகர் சங்க தேர்தலில் நடந்த பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு நீங்கள் சாட்சியாக இருந்தீர்கள். முன்னாள் டிஆர்சி உறுப்பினர் மோகன் பாபுவும், முன்னாள் தலைவர் நரேஷும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நாங்கள் பார்த்தோம்.
சங்க உறுப்பினர்களை அடித்து, வசைபாடி, அச்சுறுத்தினர். உங்களுக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையும், அவர்களின் அடியாட்களையும் வாக்குச்சாவடிக்குள் நீங்கள் அனுமதித்தீர்கள் என்று நான் நினைக்கிறேன். இதில் சில காட்சிகள் ஊடகங்களிடம் கசிந்தன.
சங்க தேர்தலுக்கு பின் நடந்த சம்பவங்களும், பொதுமக்கள் முன்னிலையில் நம்மைக் கேலிப் பொருளாக்கியுள்ளது. சில தெரிந்த நபர்களின் நடத்தை முகச் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்க உறுப்பினர்கள், நடந்த சம்பவங்களின் உண்மைப் பின்னணி என்ன என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.
வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்களில் எல்லாம் பதிவாகியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். எனவே அந்தப் பதிவுகளை எங்களிடம் பகிர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் சம்பந்தமான அத்தனை தரவுகளையும் பெறுவது எங்கள் ஜனநாயக உரிமை. தேர்தல் அதிகாரியான நீங்கள், அத்தனை சாட்சியங்களையும் 3 மாதங்கள் பாதுகாப்பது உங்கள் கடமை. தேர்தல் அதிகாரிகள் இப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பல்வேறு உச்ச நீதிமன்ற வழக்குகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
எனவே அந்தக் காணொலிப் பதிவுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ தரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உடனடியாகச் செயல்படாவிட்டால் அந்தப் பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று நான் அஞ்சுகிறேன்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- ராஜவம்சம்
- நடிகர் : சசிகுமார்
- நடிகை : நிக்கி கல்ராணி
- இயக்குனர் :கதிர்வேலு
- வெள்ளை யானை
- நடிகர் : சமுத்திரக்கனி
- நடிகை : ஆத்மியா
- இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா