தொலைதூரம் செல்லக்கூடிய ட்ரோன் மூலம் நாகாலாந்தில் மருத்துவப் பொருட்கள் விநியோகம்

3 years ago 896

Medical-supplies-are-being-distributed-in-Nagaland-by-long-distance-drone-by-ICMR

நாகாலாந்து மாநிலத்தில் தொலைதூரம் செல்லக்கூடிய ட்ரோன் மூலம் மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் விநியோகம் நடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னோடி திட்டமான i-Drone திட்டத்தின் கீழ் இந்த விநியோகம் நடைபெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சவாலான போக்குவரத்து சூழல் கொண்ட ரிமோட் பகுதிகளில் ட்ரோன் மூலம் மருந்து விநியோகிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதனை அமல்படுத்தியுள்ளது.

நாகாலாந்தின் மொகோக்சுங்கில் இருந்து டுயென்சாங்கிற்கு மருந்துப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு உள்ளது. சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ட்ரோன் வெறும் 28 நிமிடங்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் சுமந்து கொண்டு சென்ற 3525 யூனிட் மருந்துகள் சென்று சேர வேண்டிய இடத்தில் சரியாக சப்ளை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து, RT-PCR பரிசோதனை கிட் மற்றும் அவசிய தேவைக்கான மருந்துகளை இந்த ட்ரோன் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிகிறது. அதே போல RT-PCR மாதிரிகளை கொண்டு வரவும் இந்த ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளதாம்.

Read Entire Article