நான் தான் ஐ லவ் யூ சொன்னேன்: ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
09 ஜன, 2022 - 18:31 IST
நடிகர் கமல்ஹாசன் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் சாந்தனு ஹசாரிகா என்ற ஓவியரை காதலிப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் நடந்த உரையாடலின்போது, ஸ்ருதியின் பாலோயர்கள் சாந்தனு ஹசாரிகா உடனான உறவு குறித்து பல கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு ஸ்ருதி பதிலளித்தார்.
அதில், இருவரில் யார் முதலில் ஆர்வம் காட்டினீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு சாந்தனு தான் ஆர்வம் காட்டியதாக குறிப்பிட்டார். பின்னர், முதலில் யார் காதலை சொன்னது என கேட்டதற்கு, ‛நான் தான் சாந்தனுவிடம் முதலில் ஐ லவ் யூ சொன்னேன்' எனக் கூறினார். ஸ்ருதியின் இந்த லைவ் உரையாடல் வீடியோ வைரலாகியுள்ளது.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- பிழை
- இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்