சினிமா
Published : 08,Jan 2022 07:47 AM
பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக (State Icon) நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு நியமித்திருந்தது இந்திய தேர்தல் ஆணையம். இந்த நிலையில் நடிகர் சோனு சூட் நியமனத்தை திரும்பப் பெற்றது இந்திய தேர்தல் ஆணையம். ஜனவரி 4-ஆம் தேதி அன்று சோனு சூட், அந்த பொறுப்பிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவரான நடிகர் சோனு சூட், தனது நடிப்பால் பிரபலம் அடைந்தார். கொரோனா ஊரடங்கு காலங்களில் செய்வதறியாது தவித்த எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார். அவரது சமூக பணிக்காக பல தரப்பினரும் அவரை கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் அவரது சகோதரி மாளவிகா, அரசியலில் களம் இறங்க உள்ளதாகவும், தனக்கு அரசியலில் களம் இறங்கும் திட்டம் ஏதும் இல்லை எனவும் அவர் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2022. All rights reserved