பரிசோதனைகளை அதிகரித்தவுடன், தொற்று எண்ணிக்கையும் உயர்வு: கொரோனாவுடன் போராடும் கேரளா

3 years ago 477

As-the-number-of-corona-test-increases-in-Kerala--so-does-the-number-of-infections

கேரளாவில் கொரோனாவுக்கான பரிசோதனைகள் அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் அங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.

கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,21,486 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் புதிதாக 22,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்றைவிட இன்று கூட்தலாக 4,581 நபர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பரிசோதனைகள் அதிகரிப்பால்தான் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது (பரிசோதனை நேற்றைவிட இன்று 31,416 அதிகரித்துள்ளது). 

image

இன்று 22,162 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதன் மூலமாக, கேரளாவில் மொத்தபாதிப்பு எண்ணிக்கை 44,46,228 என உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று ஒரு நாளில் 178 பேர் கேரளாவில் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 23,165 என உயர்ந்துள்ளது. தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 1,86,190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 26,563 பேர் கேரளாவில் குணமடைந்துள்ளனர். மொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 42,36,309 பேர் கேரளாவில் குணமடைந்துள்ளனர்.

கேரளாவில் நேற்று முன்தினம் டிபிஆர்., 15.12 சதவீதமாக இருந்தது. நேற்று டிபிஆர்., 18.21 சதவீதமாக அதிகரித்திருந்தது. இன்று டிபிஆர்., 18.25 சதவீதமாக சற்றே அதிகரித்துள்ளது.

image

பரிசோதனைகள் அதிகரிக்கும் போது தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்பது, கேரளாவில் தொற்று பரவல் குறையவில்லை என்பதையே காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி: கேரளாவில் குறையும் தினசரி கொரோனா பாதிப்பு... பரிசோதனை குறைந்ததுதான் காரணமா? ஓர் அலசல்

கொரோனா தொற்று பரவலின் அபாயம் உணர்ந்து பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க வெண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read Entire Article