’சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது படத்தினை இயக்கி முடித்துள்ளார்.
’சார்பட்டா பரம்பரை’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கி முடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் முதன்மை கதாபாத்திரத்திலும் கலையரசன், ஹரி கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களிலிலும் நடித்துள்ளார்கள்.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடொக்ஷனும் யாழி ஃபிலிம்ஸும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் மனைவி அனிதா ரஞ்சித் காஸ்டியும் டிசைனராக பணியாற்றியுள்ளார். இதனை பெருமையுடன் தனது ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனையொட்டி, ஹார்ட்டுகள் செட்டிங் பின்னணியில் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் கேட் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இதனை அதிகாரபூர்வமாகவும் அறிவித்துள்ளனர்.