பெங்களூரு நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா முதலீடு
பதிவு செய்த நாள்
09
ஜன
2022
01:20
புதுடில்லி:பெங்களூருவை சேர்ந்த ‘குரோ’ எனும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தில், ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா, முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்.
மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட பலவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான தளமாக செயல்பட்டு வருகிறது, குரோ. இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் சேர்ந்துள்ளார், சத்ய நாதெள்ளா.
‘இந்தியாவில் நிதிச் சேவைகள் கிடைப்பதற்கான எங்கள் சேவையில், உலகின் மிகச் சிறந்த தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவரான சத்ய நாதெள்ளா இணைந்துள்ளார்’ என, குரோ நிறுவனம், ‘டுவிட்டர்’ வாயிலாக தெரிவித்துள்ளது.இருப்பினும், சத்ய நாதெள்ளா எவ்வளவு தொகையை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Advertisement
மேலும் பொது செய்திகள்
மைக்ரோ ஏ.டி.எம்., என்றால் என்ன? அந்த வசதியைபயன்படுத்துவது எப்படி?ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.கடைகளில் ... மேலும்
‘டிஜிட்டல்’ வழிகளை நாடுவது, நகரை விட்டு தொலைவில் இருந்தாலும் பெரிய வீட்டை நாடுவது என ரியல் எஸ்டேட் துறையில் ... மேலும்
சந்தை மதிப்பில் சாதனைமும்பை பங்குச் சந்தையின், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தளத்தில் ... மேலும்
புதுடில்லி:அமெரிக்காவை சேர்ந்த பிரபல ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக், ... மேலும்
புதுடில்லி:‘ரிலையன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘ரிலையன்ஸ் ஜியோ’ நடப்பு ஆண்டில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு ... மேலும்
மேலும் செய்திகள் ...
|
Advertisement |
Advertisement |
Advertisement |
|
|