சினிமா
Published : 16,Oct 2021 07:58 PM
நடிகை த்ரிஷா வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார்.
’பரமபதம்’ படத்திற்குப் பிறகு நடிகை த்ரிஷா நடிப்பில் விரைவில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ‘ராங்கி’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக சூர்யா வாங்கலா இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் த்ரிஷா. தெலுங்கில் உருவாக்கி மற்ற மொழிகளில் டப் செய்யவிருக்கிறார்கள். அவினாஷ் கொல்லா மற்றும் ஆஷிஷ் கொல்லா இணைந்து தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு ’பிருந்தா’ என்று தலைப்பிட்டுள்ளனர். விஜயதசமியை முன்னிட்டு நேற்று பூஜையுடன் அறிவிப்பு வெளியானது. இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார் த்ரிஷா.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved