‘மெட்ரோபோலிஸ்’ வசமாகிறது ‘ஹைடெக்’
பதிவு செய்த நாள்
16
அக்
2021
19:15
புதுடில்லி:மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், ஹைடெக் டயக்னாஸ்டிக் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனமான, ‘சென்டர்லேப் ஹெல்த்கேர் சர்வீசஸ்’ ஆகியவற்றை, 636 கோடி ரூபாயில் கையகப்படுத்த உள்ளது.
இதற்கு மெட்ரோபோலிஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு தற்போது அனுமதி வழங்கி உள்ளது.ரொக்கம் மற்றும் பங்குகளை கொடுப்பதன் வாயிலாக, ஹைடெக் டயக்னாஸ்டிக் நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனத்தையும் வாங்க முன்பு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது, முழுக்க ரொக்கமாகவே வழங்கி கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைடெக் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, மெட்ரோபோலிஸ் அதன் வணிகத்தை மேலும் விரிபடுத்தும் திட்டத்தில் உள்ளது.இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை, அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக முடிவடைய வேண்டும் என நிர்வாக குழுவினரால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மெட்ரோபோலிஸ் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
மும்பை:மோட்டார் வாகன காப்பீட்டை பொறுத்தவரை, பொதுத்துறையை சேர்ந்த காப்பீட்டு நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு ... மேலும்
வாஷிங்டன்:அண்மையில் இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை, அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகமும், ... மேலும்
டிஜிட்டலில் தபால் பாலிசிதபால் துறையின், பி.எல்.ஐ., எனும் தபால் ஆயுள் காப்பீடு மற்றும், ஆர்.பி.எல்.ஐ., எனும் கிராமிய ... மேலும்
புதுடில்லி:வேலை வாய்ப்புகள் சார்ந்த சமூக ஊடகமான ‘லிங்க்ட்இன்’ சேவையை, சீனாவில் நிறுத்தப் போவதாக, அதை நடத்தி ... மேலும்
புதுடில்லி:நாட்டின் சிமென்ட் உற்பத்தி, நடப்பு நிதியாண்டில் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் என, தர நிர்ணய அமைப்பான ... மேலும்
மேலும் செய்திகள் ...
|
Advertisement |
Advertisement |
Advertisement |
|
|