யுவன் ஷங்கர் ராஜா இசையில் சந்தானம் நடிக்கும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’

3 years ago 775

Puthiyathalaimurai-logo

சினிமா

15,Oct 2021 11:31 AM

Actor-Santhanam-Agent-Kannayiram-First-Look-Poster-Release

நடிகர் சந்தானம் நடிக்கும் ’ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் ‘டிக்கிலோனா’ படம் வெளியாகி கவனம் ஈர்த்தது. ‘சபாபதி’, ‘சர்வம் சுந்தரம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்தப் படங்கள் வெளியீட்டுக்கு தயாராய் உள்ள நிலையில்,சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ என்று தலைப்பிட்டுள்ளார்கள்.

image

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த ‘வஞ்சகர் உலகம்’ படத்தை இயக்கிய மனோஜ் பீதாதான் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.ஸ்வரூப் இயக்கத்தில் கடந்த 2019-ல் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 'ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாச ஆத்ரேயா' படத்தின் ரீமேக்தான் ‘ஏஜெண்ட் கண்ணாயிம்’ என்று சொல்லப்படுகிறது.

GO TO TOP

© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved

செய்தி மடலுக்கு பதிவு செய்க

Read Entire Article