சினிமா
Published : 13,Oct 2021 03:38 PM
பிரபாஸ் - தீபிகா படுகோனே இணையும் ’பிரபாஸ் 21’ படத்தின் பட்ஜெட் 500 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
’தேசிய விருது’ இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதன்பிறகு கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. ‘ராதே ஷ்யாம்’, ’சலார்’ உள்ளிட்டப் படங்களில் பிரபாஸ் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் முதல் புராஜெக்ட் கே என்று பெயரிடப்பட்டுள்ள ’பிரபாஸ் 21’படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் பட்ஜெட் 500 கோடி என்றும் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு ஒரு வருடங்களுக்குமேல் நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved