சினிமா
Published : 14,Oct 2021 09:44 AM
’ஸ்க்விட் கேம்’வெப் சீரிஸ் வெளியான 28 நாட்களில் 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பார்க்கப்பட்டுள்ளதாக நெட் ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 17 அம் தேதி கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங்-ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது ‘ஸ்க்விட் கேம்’. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றது. யூகிக்கவே முடியாத ட்விஸ்ட்டுகளால் ‘ட்விட்ஸ்ட் கேம்’ தொடர் என்று சொல்லும் அளவுக்கு பார்வையாளர்களிடம் ஆச்சர்யமூட்டியது.
இதனால், நெட் ஃபிளிக்ஸ் வரலாற்றில் குறைந்த நாட்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இணையத் தொடர் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக, 28 நாட்களில் 8.2 கோடி பேரால் பார்க்கப்பட்ட "Bridgerton" தொடர் முதலிடத்தை வகித்து வந்தது.
GO TO TOP
© Copyright Puthiyathalaimurai 2021. All rights reserved